சுடச்சுட

  
  shriSabarimalaitemple

  சபரிமலை செல்லும் பக்தர்கள், வழியில் தங்கிச் செல்வதற்கான இருப்பிட வசதியை ஏற்பாடு செய்து தர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
  இதற்காக, சபரிமலை செல்லும் வழியில் உள்ள 38 கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் தங்கும் விடுதிகள் கட்டப்படவுள்ளன.
  கேரள முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட 38 கோயில்களின் நிர்வாக அமைப்புகள் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  புதிதாகக் கட்டப்படவிருக்கும் தங்குமிடங்களில், பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான அறைகள், வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, சபரிமலை செல்லும் பக்தர்கள், குறிப்பிட்ட இந்த 38 கோயில்களுக்கும் சென்று வழிபடுவது வழக்கம். இந்த தங்குமிடங்கள் தவிர, எருமேலி, நிலக்கல் உள்ளிட்ட சில பகுதிகளிலும் பக்தர்களுக்கான தங்குமிடங்களை கேரள அரசு ஏற்கெனவே கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai