சுடச்சுட

  

  ஜிஎஸ்டி: நிகழ் கூட்டத் தொடரில் திருப்புமுனை: பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 10th March 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன்னர், செய்தியாளர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

  சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறைக்கு நிகழ் பட்ஜெட் கூட்டத் தொடர் முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  சிறு இடைவெளிக்குப் பின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை மீண்டும் தொடங்கியது.
  அதில் பங்கேற்க வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  ஜிஎஸ்டி வரி விதிப்பை அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன. அனைத்துக் கட்சிகளும் அந்த வரி விதிப்பு முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
  எனவே, இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஜிஎஸ்டி விவகாரத்துக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று நம்புகிறோம்.
  இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், பட்ஜெட் பரிந்துரைகள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும்.
  இந்த விவாதம், ஆரோக்கியமானதாகவும், ஏழை மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஜனநாய மாண்புடனும் நடைபெறும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
  ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்படுவது, இந்தியா இதுவரை கண்டிராத மிகப் பெரிய அளவிலான பொருளாதார சீர்திருத்தம் என்று கூறப்படுகிறது.
  இந்த வரி விதிப்பால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 சதவீதம் அதிகரிக்கும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதற்காக, "மத்திய ஜிஎஸ்டி' மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதனைத் தொடர்ந்து அந்தந்த மாநில சட்டப் பேரவைகளிலும் "மாநில ஜிஎஸ்டி' மசோதா அறிமுகப்படுத்தப்படும்.
  இந்த வரி விதிப்பு முறையில், எந்தெந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பணிகளை மத்திய, மாநில அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள்.
  வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai