சுடச்சுட

  

  திருச்சியில் மாநிலத் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் (இஎஸ்ஐசி) துணை மண்டல அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதன் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.குமாருக்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கடிதம் எழுதியுள்ளார்.
  இது தொடர்பாக கடந்த ஆண்டு மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத் தொடரின் போது விதி எண் 377-இன் கீழ் பி.குமார் எம்.பி. கோரிக்கை விடுத்திருந்தார்.
  இந்நிலையில், குமாருக்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அண்மையில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
  திருச்சியில் துணை மண்டல அலுவலகம் கோரும் முன்மொழிவு இஎஸ்ஐ நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
  இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 14-இல் நடைபெற்ற இஎஸ்ஐசி 206-ஆவது கூட்டத்தில் சேலத்தில் தற்போதுள்ள துணை மண்டல அலுவலகத்தை பிரித்து திருச்சியில் துணை மண்டல அலுவலகம் அமைக்க இஎஸ்ஐ கழகத்தின் நிலைக் குழு அனுமதி அளித்துள்ளது.
  திருச்சியில் அமைக்கப்படும் புதிய துணை மண்டல அலுவலக வரம்புக்குள் கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இருக்கும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai