சுடச்சுட

    
    shrilordbalajitirumala

    இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்துக்கு ஏழுமலையானின் படத்தை வழங்கிய திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு.

    திருமலை ஏழுமலையானை இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வழிபட்டார்.
    திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர்ச்செண்டு அளித்து வரவேற்றனர். பின்னர், சாதாரண பக்தர்களை போல் அவர் வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக மகா லகு (60 அடி தொலைவில்) தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.
    இதைத்தொடர்ந்து, பபின் ராவத்துக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்புப் பிரசாதங்கள், ஏழுமலையானின் படம் ஆகியவற்றை வழங்கினர்.
    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிபின் ராவத் கூறுகையில், "திருமலை ஏழுமலையானை என் வாழ்நாளில் முதல்முறையாக தரிசனம் செய்தேன். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களின் தாக்குதல் எவ்வாறு இருந்தாலும், அதனை முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் இந்திய ராணுவம் வெற்றி பெற ஏழுமலையானிடம் வேண்டினேன்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai