சுடச்சுட

    

    துணை வேந்தரை சிறை பிடித்த விவகாரம்: ஜேஎன்யு மாணவர்கள் 24 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 10th March 2017 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத் (ஜேஎன்யு) துணை வேந்தர் ஜெகதீஷ் குமாரை கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, அவரது அலுவலகத்தில் சிறை பிடித்ததாக பல்கலைக்கழக மாணவர்கள் 24 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஜேஎன்யு பதிவாளர் கடந்த 4-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் புதன்கிழமை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
    இதுகுறித்து, பதிவாளர் அளித்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது:
    ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி மாணவர் சேர்க்கைக்கான நேர்க்காணலுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பிப்ரவரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, 27-ஆம் தேதி துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் அவரது அலுவலகத்தில் இருந்து வெளியேறாத வகையில் சிறை பிடித்தனர். அத்துடன், அவரை சந்திப்பதில் பிடிவாதமாக இருந்தனர். உடல் நலக் குறைவுடன் இருந்த ஜெகதீஷ் குமாருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரையும் மாணவர்கள் அனுமதிக்கவில்லை.
    இந்நிலையில் மறுநாள், துணை வேந்தர் தங்களை சந்திக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மாணவி ஒருவர் கூறினார். எனினும், துணை வேந்தர் மாணவர்களை சந்தித்த போது அவரிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொண்டனர் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
    புகார் கூறப்பட்டுள்ள மாணவர்களில் சிலர், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai