Enable Javscript for better performance
படுத்துக்கொண்ட டிஜிட்டல் பேமெண்ட்டை தட்டி எழுப்ப சலுகைகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    படுத்துக்கொண்ட டிஜிட்டல் பேமெண்ட்டை தட்டி எழுப்ப சலுகைகள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 10th March 2017 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுதில்லி: ரூபாய் நோட்டுத் தடைக்கு பின் முகவும் பிரபலமடைந்த டிஜிட்டல் பரிமாற்றம், இ-பேமெண்ட் முறைகள், ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு நீங்கி, இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் இப்போது படுத்துக்கொண்டது. மீண்டும் மக்கள் ரொக்க பரிமாற்றத்தையே நாடத் தொடங்கி விட்டனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.

    இதையடுத்து தொடர்ந்து ஏற்பட்ட ரூபாய் தட்டுப்பாட்டை சமாளிக்க, மக்களை, டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற அரசு ஊக்கப்படுத்தியது. பலபரிசுத் திட்டங்களையும் அறிவித்தது.

    இதனால், மக்களும் வேறு வழியின்றி டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறத் தொடங்கினார்கள். இதனால் அரசு மகிழ்ச்சி அடைந்தது. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, கிரெடிட், டெபிட் கார்டு, யு.பி.ஐ., டு.எஸ்.எஸ்.டி மற்றும் மொபைல் பேங்கிங் மூலம், கடந்த டிசம்பரில் 9,575 லட்சம் பரிமாற்றங்கள் நடந்தன. இதன் மதிப்பு ரூ.104.05 லட்சம் கோடி எனத் தெரிவித்திருந்தது.

    அதைத் தொடர்ந்து அரசும், வங்கிகளும் அறிவித்த அதிரடி நடவடிக்கையை அடுத்து  ஜனவரி மாதத்தில் பரிமாற்றம் எண்ணிக்கை 8,704 லட்சமாகவும், பிப்ரவரியில் 7,630 லட்சமாகவும் இருந்தது. இந்த இரு மாதங்களிலும் பரிமாற்ற எண்ணிக்கை அளவு படிப்படியாக குறைந்தது. மேலும் இரு மாதங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் நடைபெறும் பரிமாற்றங்களின் அளவும் குறையத்தொடங்கியது.

    யு.எஸ்.எஸ்.டி., மூலம் பரிமாற்றம் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் அதிகரித்து, பிப்ரவரி மாதம் சரிந்துள்ளது. யு.பி.ஐ மூலம் நடக்கும் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் யு.பி.ஐ மூலம் ரூ.20 லட்சம் பரிமாற்றமும், ஜனவரியில் ரூ.42 லட்சமும், பிப்ரவரியில் ரூ.42 லட்சமும் ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், பற்று அட்டை (டெபிட் கார்டு), இணைய வங்கிச் சேவை (நெட் பேங்கிங்) முறை ஆகியவற்றை பயன்படுத்தி மின் பணப் பையில் பணம் செலுத்திக் கொள்ள எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று "பே-டிஎம்' நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    "பே-டிஎம்' நிறுவனத்தின் போட்டியாளரான "மொபிகிவிக்' இணையதள விற்பனை அங்காடி, தமது வாடிக்கையாளர்கள் மின் பணப் பையில் கிரெடிட் கார்டை பயன்படுத்த எந்தவொரு கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai