சுடச்சுட

    

    பதான்கோட், உரி தாக்குதல்கள்: மத்திய அரசு பாடம் கற்கவில்லை: நாடாளுமன்றக் குழு

    By DIN  |   Published on : 10th March 2017 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பதான்கோட், உரி ஆகிய ராணுவத் தளங்களில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு குற்றம்சாட்டியுள்ளது.
    இதுதொடர்பான அறிக்கையை மக்களவையில் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வியாழக்கிழமை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமானப்படைத் தளத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள ராணுவத் தளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற ராணுவத் துணைத் தலைமைத் தளபதி ஃபிலிப் கேம்போஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், நாட்டில் உள்ள ராணுவத் தளவாடங்களின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
    இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள உரி ராணுவத் தளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பதான்கோட், உரி தாக்குதல் சம்பவங்களிலிருந்து மத்திய அரசு எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை.
    எதிரிகளின் தாக்குதலுக்கு எளிதில் இரையாகும் வகையிலேயே ராணுவத் தளவாடங்கள் இருக்கின்றன. எனவே, கேம்போஸ் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை சரிசெய்ய பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai