சுடச்சுட

    

    பயங்கரவாதச் செயல்களுக்கு சதி: விமானப் படை முன்னாள் ஊழியர் கைது

    By DIN  |   Published on : 10th March 2017 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இரு தினங்களுக்கு முன் நிகழ்த்தப்பட்ட போபால்-உஜ்ஜைன் ரயில் குண்டு வெடிப்பு உள்பட பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கு சதித் திட்டம் தீட்டியவராகக் கருதப்படும் விமானப் படையின் முன்னாள் ஊழியர் ஒருவர், உத்தரப் பிரதேசத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச காவல் துறை ஏடிஜிபி தல்ஜித் செளதரி கூறியதாவது:
    முகமது கெளஸ் கான் என்ற அந்த முன்னாள் ஊழியரை, பயங்கரவாதத் தடுப்புப் படை வீரர்கள், கான்பூரில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது பல முக்கிய தகவல்களை தெரிவித்தார்.
    போபால்-உஜ்ஜைன் ரயில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி சைஃபுல்லாவுக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தவர்களில் முக்கியமானவராக முகமது கெளஸ் கான் கருதப்படுகிறார்.
    அதைத் தொடர்ந்து, மற்றொரு நபரான அஸார் என்பவரையும் பயங்கரவாதத் தடுப்புப் படை வீரர்கள் கைது செய்தனர். அவர், பயங்கரவாதச் சதிச் செயல்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார் என்று தல்ஜித் செளதரி கூறினார்.
    எனினும், அவர்கள் இருவரையும் எங்கிருந்து போலீஸார் கைது செய்தனர்? விமானப் படையில் முகமது கெளஸ் கான் வகித்த பொறுப்பு என்ன? போன்ற விவரங்களை ஏடிஜிபி தல்ஜித் செளதரி தெரிவிக்கவில்லை.
    போபால்-உஜ்ஜைன் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கைதானவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்
    துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai