சுடச்சுட

  

  பயங்கரவாதத்தை ஒடுக்க அவசர நடவடிக்கை தேவை: பிரணாப் முகர்ஜி

  By DIN  |   Published on : 10th March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranab

  பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு அவசர கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
  இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்துள்ள ஜோர்டான் பிரதமர் ஃபயாஸ் அல்-தராவ்னே குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
  அப்போது, இருதரப்பு உறவு குறித்தும், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பிரணாப் முகர்ஜி உரையாடினார். அப்போது, பிரணாப் பேசியதாவது:
  ஜோர்டானுடன் நட்பு பாராட்டுவதை பெருமையாக கருதுகிறோம். மன்னர் அப்துல்லா ஆளுகையின் கீழ் ஜோர்டான் இனப் பிரச்னைகளை மிகச் சிறப்பாக கையாளுவதை பாராட்டுகிறோம். மிக முக்கியமாக பாலஸ்தீனம்-இஸ்ரேல் பிரச்னையை தீர்ப்பதற்காக ஜோர்டான் கையாண்டுவரும் பல்வேறு முயற்சிகள் பாராட்டுக்குரியன.
  பயங்கரவாதத்தால் இந்தியா மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகின் எந்தவொரு தேசமும் பயங்கரவாதத்தை தாங்கிக் கொள்ளாது.
  எனவே, பயங்கரவாதத்தை ஒடுக்க அவசர கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
  போரால் பாதிக்கப்பட்ட அண்டை நாட்டைச் சேர்ந்த அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவி புரிந்துவரும் ஜோர்டானை பாராட்டுகிறேன். பாதுகாப்பு, வானியல் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜோர்டான் விருப்பம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது
  என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் முறையாக குடியரசுத் தலைவராக ஜோர்டானுக்கு தாம் மேற்கொண்ட அரசு முறை பயணத்தை பிரணாப் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai