சுடச்சுட

    

    பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகிறார் திக்விஜய் சிங்: வெங்கய்ய நாயுடு

    By DIN  |   Published on : 10th March 2017 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    venkaiah-naidu

    பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் கருத்து தெரிவித்திருப்பதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
    போபால் - உஜ்ஜைன் ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.
    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், "இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதன் காரணமாகவே பாகிஸ்தான் மற்றும் அதன் பயங்கரவாதக் கொள்கைகளை நோக்கி அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்' எனத் தெரிவித்திருந்தார்.
    இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தனது சுட்டுரைப் பதிவில் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:
    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் கருத்து கண்டிக்கத்தக்கது. அவருடைய கருத்தானது, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளையும் நியாயப்படுத்துவது போல உள்ளது என தனது பதிவில் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
    ஜிதேந்திர சிங் தாக்கு: திக்விஜய் சிங் கருத்து குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:
    காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் தற்போது கருத்து கூறுகிறார்கள் என்றால், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் அவர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அதன் காரணமாகவே, அவர்கள் பிரிவினைவாதிகளைப் போல் பேசுகின்றனர் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai