சுடச்சுட

  

  பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்காமல் இருந்தால்தான் பேச்சுவார்த்தை: இந்தியா

  By DIN  |   Published on : 10th March 2017 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எந்தவொரு விவகாரம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமானால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
  சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பாக, பாகிஸ்தானின் லாகூரில் இரு நாடுகளுக்கு இடையே, வரும் 20, 21-ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் இத்தகைய கருத்தை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதனால், கடந்த ஆண்டைப் போல் நிகழாண்டும் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
  இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "பாகிஸ்தானில் இருக்கும் சில பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றன; அந்த அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிதான் கடந்த ஆண்டு சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது' என்றார்.
  அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய மேலும் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
  óகடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புதான் திட்டமிட்டு அரங்கேற்றியது என்பதை இந்தியா ஏற்கெனவே ஆதாரங்களுடன் தெரிவித்து விட்டது. அந்தத் தாக்குதலை நிகழ்த்திய ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய்ஷ்-ஏ-முகமது உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணில் இருந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.
  இத்தகைய பயங்கரவாத அமைப்புகளை தேசத்தைவிட்டு வெளியேற்றுமாறு ஐ.நா. அமைப்பு அறிவுறுத்திய பிறகும், அந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.
  இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் இத்தகைய அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் கோபால் பாக்லே.
  1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியாவும், பாகிஸ்தானும் ஆண்டுக்கொரு முறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai