சுடச்சுட

    

    புழக்கத்தில் உள்ள புதிய ரூபாய் நோட்டுகள் எவ்வளவு தெரியுமா? அருண் ஜேட்லி கூறுகிறார் கேளுங்கள்..!

    By DIN  |   Published on : 11th March 2017 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arun-jaitley

    நாட்டில் ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
    இதுதொடர்பாக மக்களவையில் வெள்ளிக்கிழமையன்று கேள்வி நேரத்தின்போது அவர் கூறியதாவது: நாட்டில் முன்பு புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகளை மதிப்பிழப்பு செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதில் இருந்து பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வரையிலும் ரூ. 11,64,100 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்து 2 வாரத்தை கடந்துவிட்ட நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது ரூ. 12 லட்சம் கோடியாக நிச்சயம் அதிகரித்திருக்கும்.
    செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் எவ்வளவு எண்ணிக்கையில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் என்பது தொடர்பான துல்லியமான தகவலை தெரிவிப்பது கடினமாகும். டெபாசிட் செய்யப்பட்ட ஒவ்வொரு ரூபாய் நோட்டும், அது உண்மையானதுதானா? போலியானதா? என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அப்போது உண்மையான நோட்டுகளை தரம் பிரிக்க வேண்டியுள்ளது. இது மிகப்பெரிய பணியாகும். ஆதலால் ரூபாய் நோட்டுகளின் துல்லிய எண்ணிக்கையை தற்போது தெரிவிப்பது மிகவும் கடினம். மேற்கண்ட பணியை ரிசர்வ் வங்கி முடித்ததும், மக்களவையில் அதுதொடர்பான தகவலை மத்திய அரசு வெளியீடும்.
    ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிக்கு ஆகும் செலவினம் ஆண்டுதோறும் மாறுபடுகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களின் திறன், அச்சிடும் இயந்திரங்களின் வகை மற்றும் அவை பணியில் ஈடுபட்டிருக்கும் காலம் ஆகியவைகளில் வேறுபாடுகள் உள்ளன. இதனால், புதிய ரூ.500 நோட்டை அச்சிடுவதற்கு ரூ.2.87 முதல் ரூ.3.09 வரையிலும் செலவாகும். புதிய ரூ.1,000 நோட்டை அச்சிடுவதற்கு ரூ.3.34 முதல் ரூ.3.77 வரையிலும் செலவாகும். பழைய ரூ.1,000 நோட்டுக்கு ஆன செலவே, புதிய ரூ.2,000 நோட்டை அச்சிடுவதற்கு ஆகிறது.
    நேரடி வரி வருவாயும் கடந்த 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும், 2016-ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் நேரடி வரி வருவாய் மூலம் ரூ.1,35,660 கோடி வசூலானது. இது கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரூ.1,40, 824 கோடியாக அதிகரித்துள்ளது என்றார் அருண் ஜேட்லி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai