சுடச்சுட

  

  மத்திய அரசின் பேறுகால நலன்கள் திட்ட மசோதாவுக்கு மக்களவையில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
  மக்களவையில் "பேறுகால நலன்கள் திட்ட திருத்த மசோதா 2016' மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் எம்.வசந்தி பங்கேற்று பேசியதாவது:
  பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக உள்ள பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படுவது அவசியம். இந்நிலையில், பேறுகாலத்தின் போது பெண்களின் உடல் நலம் மற்றும் குழந்தைகளின் நலன் பேணும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா வரவேற்கத்தக்கது.
  1961-ஆம் ஆண்டின் பேறுகால நலன்கள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது. பெண்களுக்கான பேறுகால விடுப்புக் காலத்தை 12 மாதங்களில் இருந்து 26 மாதங்களாக அதிகரிக்க மசோதா வகை செய்கிறது. அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு இந்த மசோதாவின் பலன்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார் எம்.வசந்தி.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai