சுடச்சுட

  

  பே-டிஎம்மில் கடன் அட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் 2% கட்டணம்

  By DIN  |   Published on : 10th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Paytmlogo

  "பே-டிஎம்' ஆன்லைன் விற்பனை அங்காடியின் மின் பணப் பையில் (இ-வாலட்) கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி பணம் செலுத்தினால் 2 சதவீத கட்டணத்தை வாடிக்கையாளர்கள் இனி செலுத்த வேண்டும்.
  இதுகுறித்து "பே-டிஎம்' நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  செல்லிடப்பேசி எண்களுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள
  சலுகை பெறவும், தங்கள் வங்கிக் கணக்குகளில் எந்தவித கட்டணமும் இன்றி பணப் பரிமாற்றம் செய்துகொள்ளவும் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி தங்கள் மின் பணப்பையில் சிலர் பணம் செலுத்தி வந்ததைக் கண்டறிந்தோம்.
  இந்த முறைகேட்டை தடுப்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்தி மின் பணப் பையில் பணம் செலுத்தினால் 2 சதவீத கட்டணத்தை வசூலிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
  அதேநேரம், பற்று அட்டை (டெபிட் கார்டு), இணைய வங்கிச் சேவை (நெட் பேங்கிங்) முறை ஆகியவற்றை பயன்படுத்தி மின் பணப் பையில் பணம் செலுத்திக் கொள்ள எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்று அந்த அறிவிக்கையில் "பே-டிஎம்' நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
  இந்த புதிய நடைமுறை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
  இலவச அறிவிப்பை வெளியிட்ட "மொபிகிவிக்': இதற்கிடையே, "பே-டிஎம்' நிறுவனத்தின் போட்டியாளரான "மொபிகிவிக்' இணையதள விற்பனை அங்காடி, தமது வாடிக்கையாளர்கள் மின் பணப் பையில் கிரெடிட் கார்டை பயன்படுத்த எந்தவொரு கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai