Enable Javscript for better performance
மக்களவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் முழக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் முழக்கம்

    By DIN  |   Published on : 10th March 2017 11:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliamentofindia


    புது தில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்பிக்கள் முழக்கத்தில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

    ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரியும் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால், அவை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள், அவைத் தலைவரை முற்றுகையிட்டு சிறிது நேரம் முழக்கமிட்டனர். அப்போது அவைத் தலைவர் குரியன், அவர்களை தங்கள் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டதை அடுத்து அனைவரும் திரும்பிச் சென்று இருக்கையில் அமர்ந்தனர்.

    இதனால் மாநிலங்களவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai