சுடச்சுட

  

  மத்திய போலீஸ் பயிற்சி அகாடமி கட்டிடம் சரிந்து விழுந்து ஒருவர் பலி

  By DIN  |   Published on : 10th March 2017 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் மத்திய போலீஸ் பயிற்சி அகாடமியின் கட்டுமான கட்டிடம் நேற்று இரவு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
  இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வரான சிவராஜ் சிங் சவுகான், கட்டிட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதியும், ஆபத்தான நிலையில் உள்ள ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும், மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai