சுடச்சுட

  
  soniagandhi3

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
  உடல் நலக்குறைவால், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடாத அவர், தேர்தல் முடிவுகளையும் நேரில் பார்க்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
  சோனியா காந்தி, வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக புதன்கிழமை இரவு வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்றும், ஹோலி பண்டிகைக்கு(மார்ச் 13) பிறகு அவர் தில்லி திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
  எனினும், அவர் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்பது குறித்து கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், இதற்கு முன்பு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட அமெரிக்காவுக்கு அவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் சோனியா காந்தி, வெளிநாட்டுக்குப் புறப்படும் முன், அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai