சுடச்சுட

    

    முன்னாள் மக்களவைத் தலைவர் ரபி ராய் உள்பட சமீபத்தில் மறைந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்ட்டது.
    மாநிலங்களவையில்...: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு, வியாழக்கிழமை தொடங்கியது. மாநிலங்களவையில், நாடாளுன்ற உறுப்பினர் ஹாஜி அப்துல் சலாம் (69), கடந்த மாதம் 28-ஆம் தேதி மறைந்த செய்தியை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார். ஹாஜி அப்துல் சலாம், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    ""ஹாஜி அப்துல் சலாமின் மறைவால், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை இந்த நாடு இழந்துவிட்டது. அவர் சிறந்த நிர்வாகியாகவும், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சமூகத் தொண்டராகவும் விளங்கினார்'' என்று அன்சாரி இரங்கல் குறிப்பை வாசித்தார்.
    இதேபோல், சமீபத்தில் மறைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்கள் புட்டபகா ராதாகிருஷ்ணா, பி.சிவசங்கர், சையது சஹாபுதீன், முன்னாள் மக்களவை உறுப்பினர் ரபி ராய் ஆகியோரின் பிரிவையும் ஹமீது அன்சாரி நினைவுகூர்ந்தார்.
    நாள் முழுவதும் ஒத்திவைப்பு: அப்போது, ""மறைந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று ஹமீது அன்சாரி கூறினார். அதன் பிறகு மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடங்கள் மெüன அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவையை வெள்ளிக்கிழமைக்கு ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.
    மக்களவையில்...: மக்களவையிலும் மறைந்த முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று சில நிமிடம் மெüன அஞ்சலி செலுத்தினர். பின்னர் தொடர்ந்து அவை அலுவல்கள் நடைபெற்றது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai