Enable Javscript for better performance
மின்சார வாகனங்களுக்காக 1000 "சார்ஜிங்' நிலையங்கள் அமைக்க டாடா திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மின்சார வாகனங்களுக்காக 1000 "சார்ஜிங்' நிலையங்கள் அமைக்க டாடா திட்டம்

    By DIN  |   Published on : 10th March 2017 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்கான 1000 மின்னேற்று (சார்ஜிங்) நிலையங்கள் அமைக்க டாடா தில்லி மின்சாரம் விநியோக நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
    இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "வடக்கு, வடமேற்கு தில்லியில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்கள் அமைப்பது தொடர்பாக தில்லி மாநகராட்சி, தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் ஆகியவற்றிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
    வாகனங்களில் மின்னேற்றம் செய்ய 6 முதல் 8 மணி நேரம் ஆகும். அதுவரை வாகனங்களை நிறுத்தி வைக்க அதிகமாக இடம் தேவை.
    தற்போது தில்லியில் உள்ள டாடா மின் விநியோக நிறுவனங்களில் 5 மின்னேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதை அடுத்த 5 ஆண்டுகளில் 1000மாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களில் விரைவாக மின்னேற்றம் செய்வதற்கான நிலையம் அமைக்க ரூ. 1 லட்சமும், சாதாரண மின்னேற்றம் செய்ய ரூ. 50,000-ம் தேவைப்படுகிறது. மின்னேற்றம் செய்யப்படும் வாகனங்களைப் பயன்பாடு கடந்த ஓராண்டில் தில்லியில் அதிகரித்துள்ளது. இந்த வகையான வாகனங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai