சுடச்சுட

    

    முன்பதிவில் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் விவரம்

    By DIN  |   Published on : 10th March 2017 04:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமலை தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதளத்தில் சுமார் 50 ஆயிரம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதனை பக்தர்கள் முன்பதிவு செய்து, பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இம்மாதம் 3-ஆம் தேதி தேவஸ்தானம் 48,690 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டது.
    அதில், 8-ஆம் தேதி நிலவரப்படி ஆந்திரத்தில் 11,637, தமிழ்நாட்டில் 4,093, தெலங்கானாவில் 3,595, கர்நாடகத்தில் 3,462, மகாராஷ்டிரத்தில் 725, குஜராத்தில் 257, வெளிநாடுகளில் 155, கேரளத்தில் 131, ஒடிஸாவில் 92, அருணாசலப்பிரதேசத்தில் 61, தில்லியில் 59, உத்தரபிரதேசத்தில் 51, புதுச்சேரியில் 49, மத்தியப்பிரதேஷில் 38, மேற்கு வங்காளத்தில் 32, ஹரியாணாவில் 11, பிகாரில் 6, உத்தரகண்டில் 5 , அந்தமானில் 4, ஜார்கண்டில் 2, ஜம்மு-காஷ்மீர், அசாம், பஞ்சாபில் தலா ஒரு டிக்கெட்கள் வீதம் பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    இவை தவிர ஆர்ஜித பிரம்மோற்சவம் 5,296, கல்யாணோற்சவம் 1,438, சகஸ்ரதீபாலங்கார சேவா 12,368, ஊஞ்சல் சேவை 443, வசந்தோற்சவம் 4,650 என 24,195 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன.
    இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai