சுடச்சுட

  

  வீரர்களின் குறைகளை முறையாக தீர்க்க ராணுவத்தினருக்கு அறிவுறுத்தல்: மனோகர் பாரிக்கர்

  By DIN  |   Published on : 10th March 2017 11:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Manohar Parrikar

  ராணுவ வீரர்களின் குறைகளை முறையான விதத்தில் தீர்ப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

  மகாராஷ்டிர மாநிலம், தியோலாலி கன்டோன்மென்ட் பகுதியில் கடந்த 3-ஆம் தேதி ராணுவ வீரர் ராய் மாத்யூ என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
  இந்நிலையில், மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தின்போது இந்த விவகாரம் குறித்து சில உறுப்பினர்கள் அமைச்சர் மனோகர் பாரிக்கரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
  இதற்கு பதிலளித்து, அவர் பேசியதாவது: ராணுவ வீரர் ராய் மாத்யூவின் மரணமானது அசாதாரணமான சம்பவமாகும். இதுதொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
  ராணுவ வீரர்களின் குறைகளை முறையான விதத்தில் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மனோகர் பாரிக்கர்.
  முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, "அவ்வப்போது வீரர்கள் தங்களுடைய குறைகளை வெளிப்படுத்தும் சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன. எனினும், இதை ஒட்டுமொத்த வீரர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக கருதலாகாது' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai