Enable Javscript for better performance
2020-ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை எவ்வளவு தெரியுமா...?- Dinamani

சுடச்சுட

    

    2020-ம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை எவ்வளவு தெரியுமா...?

    By DIN  |   Published on : 10th March 2017 01:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gold-bonds

    துபாய்: 2020-ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 950 டன்களை எட்டும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  
    இந்திய பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது தங்கம். கடந்த காலங்களில் இந்தியாவில் தங்கத்தின் தேவையில் லேசான பின்னடைவு ஏற்பட்டாலும் பின்னர் நல்ல முன்னேற்றத்தை கண்டது. இந்திய பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்த தங்கத்தின் தேவையை, இந்திய சந்தையில் குறைக்க முடியாது.
    2017-ல் தங்கத்திற்கான தேவை முன்னேற்றத்தை காணும் என்றாலும் வாடிக்கையாளர்கள் 650 டன்கள் முதல் 750 டன்கள் வரை வாங்குவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆனால், பொருளாதார வளர்ச்சி, தங்க விற்பனைச் சந்தையில் உள்ள வெளிப்படைத் தன்மை ஆகியவற்றினால் தேவை இன்னும் கூடுதலாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
    2020-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியர்களின் தங்கத்தின் தேவை 850 டன்களிலிருந்து 950 டன்கள் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    2016-ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நாங்கள் வாடிக்கையாளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பின் போது, பணத்தை விட தங்கத்தை அதிகம் நம்புகிறோம் என்ற கூற்றுக்கு 63 சதவீதம் ஆதரவாக பதில் அளித்தனர்.
    நீண்ட கால அடிப்படையில் தங்கம் எங்களை பாதுகாப்பாக உணரச் செய்கிறது என்ற கூற்றுக்கு 73 சதவீதம் வாடிக்கையாளர்கள் ஆதரவாக பதில் அளித்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai