சுடச்சுட

    

    ஆந்திர முதல்வரின் மகன் உள்பட 7 பேர் சட்ட மேலவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு

    By DIN  |   Published on : 11th March 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநில சட்ட மேலவை உறுப்பினர்களாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் உள்பட 7 பேர் போட்டியின்றி வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
    லோகேஷ், தோக்கா மாணிக்ய வரபிரசாத், கரணம் பாலகிருஷ்ண மூர்த்தி, போதுலா சுனிதா, பட்சுலா அர்ஜுனுடு ஆகிய 5 பேர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
    மற்ற இரண்டு பேர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அல்ல ஸ்ரீநிவாஸ், கங்கு பிரபாகர் ரெட்டி ஆகியோர் ஆவர். தற்போது சட்டமேலவை உறுப்பினர்களாக உள்ள 7 பேரின் பதவிக் காலம் வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவர்களின் இடங்களை நிரப்புவதற்காக இந்த 7 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai