சுடச்சுட

    

    ஆயுதத் தளவாடங்களை பராமரிப்பதில் சுணக்கம்: ராணுவம் மீது சிஏஜி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 11th March 2017 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆயுதத் தளவாடங்களை பராமரிப்பதில் ராணுவம் பெரும் சுணக்கம் காட்டி வருவதாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை (சிஏஜி) குற்றம்சாட்டியுள்ளது.
    பாதுகாப்புத் துறை தொடர்பான சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    ராணுவத்தில் உள்ள முக்கியமான ஆயுதங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. உதாரணமாக, காலாட்படையின் பீரங்கி உள்ளிட்ட போர் வாகனங்கள் 153 நாள்களுக்கு ஒருமுறை முற்றிலுமாக பழுதுபார்க்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு 1,512 நாள்கள் (சுமார் நான்கரை ஆண்டு) எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    அதேபோல், எல்லைச் சாலைகள் அமைப்பும் (பி.எம்.ஓ.) மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. இந்திய - சீன எல்லைச் சாலைகள் திட்டத்தின் கீழ், சுமார் 3,409 கிலோமீட்டர் நீளம் கொண்ட 61 சாலைகள் அமைக்கும் பணிகளில் பி.எம்.ஓ. அமைப்பு தேவையற்ற காலதாமதங்களை செய்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai