சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை: நீதிபதி கர்ணன் உத்தரவு!

    By DIN  |   Published on : 11th March 2017 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karnapg

    தனக்கு பிடிஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் தன்னிச்சையாக உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    முன்னதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்பட 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கர்ணனுக்கு பிணையில் வெளிவரக் கூடிய பிடிஆணையை வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.
    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலுள்ள தனது வீட்டில், செய்தியாளர்களுக்கு நீதிபதி கர்ணன் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது: உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவருக்கு எதிராக பிடிஆணை பிறப்பிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. எனக்கு எதிரான நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. நான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் குறிவைக்கப்படுகிறேன். எனக்கு எதிரான பிடிஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது.
    எனவே, எந்தவொரு நீதிமன்றமும் (உச்ச நீதிமன்றம்) சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்குரிய சட்டப் பிரிவுகளின்கீழ், சிபிஐ வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறேன்.
    மேலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவர்கள் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின்கீழ் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடுகிறேன்.
    அதேபோல, இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின்கீழ் உரிய விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, வழக்கின் அனைத்து விவரங்களையும் மக்களவைத் தலைவரிடம் வழங்கும்படி, மக்களவை, மாநிலங்களவை தலைமைச் செயலர்களுக்கு உத்தரவிடுகிறேன். எனக்கு எதிராக சட்டவிரோதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிஆணையை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று கர்ணன் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai