Enable Javscript for better performance
உத்தரப்பிரதேச பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டம்; சமாஜ்வாதி அலுவலகத்தில் அமைதி- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப்பிரதேச பாஜக அலுவலகத்தில் கொண்டாட்டம்; சமாஜ்வாதி அலுவலகத்தில் அமைதி

    By DIN  |   Published on : 11th March 2017 10:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    UP


    லக்னௌ: இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

    உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.

    இதனால், பாஜக அலுவலகங்களில் தொண்டர்களும், தலைவர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துகளை தெரிவித்தும் வெற்றி முழக்கங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி மலரக் காரணமானவர் என்று தொண்டர்களால் கருதப்படும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஏராளமான பாஜக தொண்டர்கள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    அதே சமயம், சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில் அமைதி நிலவுகிறது.

    சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆதிக்கத்தால், உத்தரப்பிரதேசத்தில் பின்தங்கியிருந்த பாஜக, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai