சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொங்கு சட்டப் பேரவை அமைவது புதிதல்ல என்பதை முந்தைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் 16 முறை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதில் தனித்து ஒரு கட்சி வெற்றி பெற்று, மாநிலத்தில் 5 ஆண்டு கால ஆட்சியை பூர்த்தி செய்திருப்பது 7 முறையே நடந்துள்ளது.
  9 முறை, 4 மாத காலத்துக்கும் குறைவான காலமே அரசுகள் ஆட்சியில் இருந்துள்ளன.
  போதிய பெரும்பான்மை இல்லை, அரசியல் ஸ்திரமின்மை போன்ற பிரச்னைகளால் பேரவைக்கு 7 முறை இடைக்காலத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1998-ஆம் ஆண்டில் இதுபோன்ற காரணத்துக்காக தேர்தல் நடத்தப்பட்டது.
  நாட்டிலேயே மிகவும் பெரிய மாநிலமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இதுவரை 10 முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2002-ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் அமல்படுத்தப்பட்டது.
  1995-ஆம் ஆண்டில் பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், தலா 6 மாதம் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளலாம் என்ற திட்டத்துடன் ஆட்சியமைத்தன. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 2007, கடந்த 2012-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் முறையே பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகள் அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சியமைத்தன. அந்த 2 கட்சிகளும் தங்களது முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்தன.
  இதுபோல், இந்தத் தேர்தலிலும் ஏதேனும் ஓர் கட்சி தனித்து வெற்றி பெற்று ஆட்சியமைக்குமா? அல்லது தொங்கு பேரவை மீண்டும் அமையுமா? என்பது சனிக்கிழமை பிற்பகலில் தெரிந்து விடும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai