சுடச்சுட

  

  லக்னோ: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை (மார்ச் 11) எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருப்பதால் இன்று சனிக்கிழமை பிற்பகலுக்குள் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போகும் கட்சிகள் எவை என்பது தெரிந்துவிடும்.

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் உள்ள 403 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11-ஆம் தேதி முதல் கடந்த 8-ஆம் தேதி வரையிலும் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன.

  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
  தற்போதைய நிலவரப்படி பாஜ 226 தொகுதிகளிலும், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 67 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 28 தொகுதிகளிலும், ஆர்.எல்.டி 2 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

  வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai