சுடச்சுட

    

    உத்திரப்பிரதேசத்தில் தாமரை மலர்ந்தது: 15 ஆண்டுகளுக்குப் பிறகு சைக்கிள் பஞ்சாரானது

    By DIN  |   Published on : 11th March 2017 11:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp

    லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 304 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அதிக இடங்களை அந்தக் கட்சி பிடித்து வருவதால் பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்தக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. மொத்தமுள்ள 403 தொகுதியில் அந்தக் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, அதிக இடங்களைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியாயின.

    அதன்படி, இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பாஜக முன்னிலை வகிக்த்து வருகிறது.

    பெரும்பாலான தொகுதிகளில் அந்தக் கட்சி முன்னிலை வகிப்பதால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காலையிலேயே அவர்கள் பாஜக அலுவலகங்களில் கூடி இனிப்புகள் வழங்கத் தொடங்கினர்.

    அதே நேரம் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உத்திரப்பிரதேசத்தில் தாமரை மலர்ந்தது: சைக்கிள் பஞ்சாரானது உற்சாகம்!
    வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை:
    பாஜக - 304
    எஸ்பி + காங்கிரஸ் கூட்டணி - 73
    பிஎஸ்பி - 17
    மற்றவை - 8

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai