சுடச்சுட

  

  உ.பி.யில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்: ராகுல் நம்பிக்கை

  By DIN  |   Published on : 11th March 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜவாதி -காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.
  இதுதொடர்பாக தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
  பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போது இதுபோன்றுதான் பாஜக வெற்றி பெறும் என்று வாக்குக் கணிப்புகள் வெளியாகின. ஆனால் அவை அனைத்தும் பொய்யாகின. பிகாரில் ஐக்கிய ஜனதா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றது. அதுபோன்றுதான் உத்தரப் பிரதேசத்தில் தற்போது நடக்கப் போகிறது.
  உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும். மார்ச் 11-இல் (சனிக்கிழமை) மீண்டும் சந்திப்போம் என்றார் ராகுல் காந்தி.
  அவரிடம் வாக்குக் கணிப்புகள் மீதான அபிப்ராயம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "வாக்குக் கணிப்பு மீதான எனது கணிப்பை தெரிவிக்க விரும்பவில்லை' என்றார்.
  காங்கிரஸ் கருத்து: இதனிடையே தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான குலாம் நபி ஆஸாதும், உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றார். அப்போது அவரிடம், உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வி அல்லது வெற்றிக்கு கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பொறுப்பேற்பாரா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
  அதற்கு குலாம் நபி ஆஸாத் பதிலளிக்கையில், "தனிப்பட்ட நபர்கள் மீதான தீர்ப்பாக தேர்தல்களை எடுத்துக் கொள்ளக் கூடாது' என்றார்.
  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரணதீப் சுர்ஜேவாலா கூறுகையில், "உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் தங்கள் கட்சி வெற்றி பெறும்' என்றார்.
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்து வெளியான பல்வேறு வாக்குக் கணிப்புகளும், பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன. சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி 2-ஆவது இடத்தையே பிடிக்கும் என்றும் அந்த கணிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai