சுடச்சுட

    

    உ.பி., உத்தராகண்ட்டில் பாஜக; பஞ்சாப்பில் காங்: கோவா, மணிப்பூரில் இழுபறி

    By DIN  |   Published on : 11th March 2017 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    utharakahnat_BJP

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.

    பதிவான வாக்குகள் இன்று (சனிக்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய முன்னிலை நிலவரப்படி உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைய உள்ளது. இந்த மாநிலங்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. அதேபோல், பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

    ஆனால், மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலை நீடிக்கிறது. இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளன. எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில், பிற கட்சிகளுடன் சேர்ந்துதான் இந்த இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai