சுடச்சுட

    

    கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை வழங்குவதைத் தடுக்க ஆலோசனை

    By DIN  |   Published on : 11th March 2017 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nasim

    அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் நடைமுறைகளில் ரொக்கப் பரிவர்த்தனையை முழுமையாதத் தடுக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
    பெயர் வெளியிடாதவர்களிடம் இருந்து ரூ.2,000-க்கும் அதிகமாக வழங்கப்படும் நன்கொடையைப் பெற அரசியல் கட்சிகளுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இது பல்வேறு கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்கு அடுத்தகட்டமாக நன்கொடைகளை ரொக்கமாக வழங்குவதைத் தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
    இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஸீம் ஜைதி, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
    பெயர் வெளியிடாதவர்களால் வழங்கப்படும் நன்கொடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மூவர், என்னைத் தொடர்புகொண்டு இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
    எவ்வளவோ கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதிலுள்ள துளைகளின் வழியே சில தவறுகள் அரங்கேறிக் கொண்டேதான் வருகின்றன. ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் குறிப்பிட்ட அளவாவது வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்பது உறுதி.
    அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை வழங்குவதைத் தடுக்க வேண்டும் என்று பரவலாக ஒரு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அத்தகைய நிலையை எட்ட வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் குறிக்கோளும் கூட.
    ஆனால், ரொக்கமில்லா நன்கொடை நடைமுறையை வெற்றிகரமாக அமலுக்குக் கொண்டு வர இயலுமா? என்பது தெரியவில்லை. இருப்பினும், அதற்கான முயற்சியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபடும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai