சுடச்சுட

  

  கல்வி நிறுவனங்களில் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக வைப்பது தொடர்பான தனிநபர் மசோதா மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
  நன்னெறிப் பாடமாக மாணவர்களுக்கு கீதையை கல்வி நிறுவனங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி இந்த தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார். அதனுடன் சேர்த்து மொத்தமாக, 103 தனிநபர் மசோதாக்கள் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  அவற்றில், பொது இடங்களில் அசுத்தம் செய்வதைத் தடுக்கக் கோரும் சுகாதாரப் பராமரிப்பு மசோதாவும் ஒன்று. அதனை பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி தாக்கல் செய்தார்.
  இதைத் தவிர, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கென பிரத்யேக மகளிர் நீதிமன்றங்களை அமைப்பது குறித்த மசோதாவை தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கொண்டு வந்தார்.
  திருமண நிகழ்ச்சிகளில் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க வலியுறுத்தும் தனிநபர் மசோதாவை காங்கிரஸ் எம்.பி. ரஞ்சித் ரஞ்சன் அறிமுகப்படுத்தினார். பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான நிஷிகாந்த் துபே, இளைஞர் மேம்பாட்டுக்கான விரிவான கொள்கை குறித்த மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai