சுடச்சுட

    

    காங்கிரஸ் பின்னடைவுக்கு ராகுலை குற்றம்சொல்வதா? சிங்வி காட்டம்

    By DIN  |   Published on : 11th March 2017 11:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rahulganthi


    புது தில்லி: 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்துள்ள பின்னடைவுக்கு, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுலை மட்டும் குறை சொல்வது ஏன்? என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு, சில முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் விமரிசகர்களும் ராகுல் காந்தியை விமரிசித்து வருகின்றனர்.

    இது குறித்துப் பேசிய அபிஷேக் சிங்வி, வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவு ஏற்பட்டால், ராகுல் காந்தியை குற்றம்சொல்வதா? எப்படியும் அவர் தனது நெஞ்சில் தோட்டாவை ஏற்றுக் கொள்வார் என்று கூறினார்.

    உத்தரப்பிரதேசத்தில் பாஜக 300 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் போட்டியிட்ட 105 தொகுதிகளில் 11 இடங்களில் மட்டும் முன்னிலை வகித்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai