சுடச்சுட

    

    கோவாவில் பாஜக வெற்றி பெற்றால் பாரிக்கருக்கு முதல்வர் பதவி?

    By DIN  |   Published on : 11th March 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manohar parikkar

    கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல்வராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
    கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் ஏற்கெனவே 3 முறை பதவி வகித்துள்ளார். கடைசியாக 2012-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் பாரிக்கர் தலைமையில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இதனிடையே, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்ததும் பாரிக்கர் மத்திய அரசியலுக்கு சென்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
    இந்நிலையில், கோவா பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், பாரிக்கர் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பி முதல்வர் பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், தற்போதைய முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகரின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
    கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 36-இல் போட்டியிட்டது. பிற தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு பாஜக ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai