Enable Javscript for better performance
சகிப்புத்தன்மை குறித்து இந்தியாவுக்கு பாடம் நடத்தத் தேவையில்லை: சுவாமி- Dinamani

சுடச்சுட

    

    சகிப்புத்தன்மை குறித்து இந்தியாவுக்கு பாடம் நடத்தத் தேவையில்லை: சுவாமி

    By DIN  |   Published on : 11th March 2017 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி: சகிப்புத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
    "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பேச்சு சுதந்திரம்' என்ற தலைப்பில் தில்லி பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    அதில் பங்கேற்று சுவாமி கூறியதாவது:
    இந்தியாவில் பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்திய சமூகம் எப்போதும் சகிப்புத்தன்மையுடன் இருந்து வருகிறது. மக்கள் அனைவரும் விவாதம் செய்வதன் மூலம் தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட தேசத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
    எங்களுக்கு யாரும் அதுதொடர்பாக பாடம் நடத்தத் தேவையில்லை என்று சுவாமி தெரிவித்தார்.
    இந்த நிகழ்ச்சி கடந்த 4-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி
    பல்கலைக்கழக முதல்வர் அப்போது இந்நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai