சுடச்சுட

  

  சட்டீஸ்கரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்குதல்: 11 பேர் பலி!

  By PTI  |   Published on : 11th March 2017 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CRPF

   

  ராய்பூர்: சட்டீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள சுக்மா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸல்கள் நடத்திய கடும் துப்பாக்கிச் சூட்டில் 11 வீரர்கள் பலியாகினர்.

  சட்டீஸ்கரில் நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சுக்மா மாவட்டமும் ஒன்று. அங்கே புதிதாக உருவாக்கப்பட்டு வரும் இங்ரம் -பெஜ்ஜி சாலையில் நடைபெறும் சாலை பணிகளை கவனித்து பாதுகாப்பு கொடுப்பதற்காக சி.ஆர்.பி.எப் வீரர்கள் அடங்கிய தனி அணி ஒன்று உள்ளது.  219-ஆவது பட்டாலியனைச் சேர்ந்த இந்த வீரர்கள் அடங்கிய அணியானது இன்று காலை 09.15 மணி அளவில் கொட்டச்செரு கிராமம் அருகில் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

  அப்பொழுது வரிசையாக சிறிய அளவிலான வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து வீரர்களின் கவனத்தை நிலைகுலையச் செய்த நக்ஸலைட்டுக்கள் பின்னர் பாதுகாப்புப் படையினரை நோக்கி தாறுமாறாக  சுடத் தொடங்கினர். இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 5 பேர்க படுகாயமடைந்தனர்.

  காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக விமானம் மூலம் பெஜ்ஜியில் உள்ள சி.ஆர்.பி.எப் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். கூடுதல் படை வீரர்கள் அங்கே  அனுப்பப்பட்டு மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் சேகரிக்கப்பட்டன.

  தாக்குதலில் ஈடுபட்ட நக்ஸலைட்டுகள் பத்து துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ரேடியோ கருவிகளையும் கைப்பற்றிச் சென்று விட்டதாக சி.ஆர்.பி.எப் உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai