Enable Javscript for better performance
"சிப்பெட்' தலைமையகம் இடமாற்றல் முடிவை மறுஆய்வு செய்ய அதிமுக எம்.பி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    "சிப்பெட்' தலைமையகம் இடமாற்றல் முடிவை மறுஆய்வு செய்ய அதிமுக எம்.பி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 11th March 2017 02:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமையகத்தை சென்னையில் இருந்து தில்லிக்கு மாற்றும் முடிவை மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மக்களவையில் தென்சென்னை தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் கோரிக்கை விடுத்தார்.
    இதுதொடர்பாக மக்களவையில் அவர் வியாழக்கிழமை (மார்ச் 9) முன்வைத்த கோரிக்கை: சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) தலைமையகத்தை தில்லி என்சிஆர் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநரை மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
    இது தமிழகத்திற்கும், பிளாஸ்டிக் தொழில் துறையினருக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
    சிப்பெட் நிறுவனம் 1968-ஆம் ஆண்டில் சென்னையில் அமைக்கப்பட்ட முன்னணி ஆராய்ச்சி நிறுவனமாகும். நாட்டில் மிகவும் தொழில்மைய மாநிலங்களில் ஒன்றாகத்
    தமிழகம் இருந்து வருகிறது.
    இதனால், ஆட்டோமொபைல்ஸ், கனகர பொறியியல், மருத்துவமயமாக்கல், மின்னியல், மின் பொறியியல் போன்ற முக்கியத் தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக்கிற்கான பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்நிறுவனம் தேவையாக இருந்து வருகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து தொழிற்சாலைகளும், சிப்பெட்டும் பரஸ்பரம் பயனடைந்துள்ளன. சிப்பெட் தலைமையகத்தை மாற்றுவதற்கு அதன் அமைவிடம் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் சிப்பெட் நிறுவனத்தை தில்லியின் என்சிஆர் பகுதிக்கு மாற்றும் தேவை இருக்காது.
    இந்த நிறுவனத்தை மாற்றுவது தென் மாநிலங்களின் அனுகூலத்தை பறிப்பது போன்றதாகும். எனவே, சிப்பெட் தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றும் முடிவை மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜெயவர்தன் வலியுறுத்தினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai