சுடச்சுட

    

    சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல்: ஊடகங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி

    By DIN  |   Published on : 11th March 2017 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் ஊடகங்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
    இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த பத்திரிகையாளர் ஹரி ஜெய் சிங் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
    சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழலில் சில ஊடகங்களைச் சேர்ந்த நபர்களுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயுத பேர தரகர்களால் லஞ்சம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு பத்திரிகையாளர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இத்தாலிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்.
    இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
    இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், மோகன் எம் சாந்தன் கௌடர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது:
    இந்த விவகாரத்தில் ஊடகத்தினருக்கு நேரிடையாக எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அதுதொடர்பாக எந்த ஊடகத்துக்கு எதிராகவும் விசாரணை நடத்த எங்களால் உத்தரவிட முடியாது. இது ஊடகத்தின் சுதந்திரத்தன்மையை குறைப்பது போலாகிவிடும். இது ஊடகம் மீதான தாக்குதல் போன்றது. இதை எங்களால் அனுமதிக்க முடியாது என்றனர் நீதிபதிகள். மேலும் அந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.
    இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய ரூ.3,600 கோடி மதிப்பில் சொகுசு ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.
    இதில் இந்தியாவைச் சேர்ந்தோருக்கு ரூ.360 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai