சுடச்சுட

    
    tirumalagold

    தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 6.4 டன் தங்கம் சேகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக, மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த விவரம்: வீடுகளிலும், தனியார் அமைப்புகளிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ள தங்கத்தை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துவதற்காக, தங்க முதலீட்டுத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது.
    மேலும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, தங்கம் இறக்குமதி செய்வது குறைவதால், நடப்பு கணக்குப் பற்றாக்குறை சரிவடையும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
    இத்திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி வரை, 6,410 கிலோ தங்கம் சேகரிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதங்களில் ரூ.400 வரை குறைந்து, வெள்ளிக்கிழமை (மார்ச் 10) நிலவரப்படி, 10 கிராம் தங்கத்தின் விலை, ரூ.28,850-ஆக உள்ளது.
    அதன்படி, தற்போது ரூ.1,850 கோடி மதிப்புள்ள தங்கத்தை மத்திய அரசு சேகரித்து வைத்துள்ளது என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai