Enable Javscript for better performance
தோற்றது ஏன்? மாயாவதியின் குற்றச்சாட்டும் ஆதாரமும்; வாக்குச் சீட்டு கோருகிறார்- Dinamani

சுடச்சுட

    

    தோற்றது ஏன்? மாயாவதியின் குற்றச்சாட்டும் ஆதாரமும்; வாக்குச் சீட்டு கோருகிறார்

    By DIN  |   Published on : 11th March 2017 02:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mayawati


    புது தில்லி: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பது குறித்து மாயாவதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கட்சியின் தோல்வி குறித்து பேசுகையில், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்குப் பதிவாகும் வகையில் திருத்தப்பட்டிருந்தது. பல வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுக்கு விழும் வாக்குகளை பதிவு செய்து கொள்ளவேயில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

    உத்தரப்பிரதேசத்தின் மொத்தமுள்ள 403 இடங்களில் வெறும் 17 இடங்களில்தான் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை வகிக்கிறது. இதைத் தொடர்ந்து பேசிய மாயாவதி, மேற்கண்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். பாஜக 306 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    மேலும் தனது குற்றச்சாட்டுக்கு மாயாவதி ஒரு ஆதாரத்தையும் முன் வைத்துள்ளார். அதாவது, உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெற்றிருப்பதே, முறைகேடு நடந்ததற்கான சாட்சி என்று கூறுகிறார்.

    நீங்கள் நேர்மையானவராக இருந்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தை விட்டுவிட்டு, வாக்குச் சீட்டை வைத்து மறுபடியும் தேர்தல் நடத்த, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன் வர வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai