சுடச்சுட

    

    பஞ்சாப்: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை (மார்ச் 11) எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருப்பதால் இன்று சனிக்கிழமை பிற்பகலுக்குள் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போகும் கட்சிகள் எவை என்பது தெரிந்துவிடும்.

    பஞ்சாப்பில் (117)  கடந்த மாதம் 4-ஆம் தேதியும், மணிப்பூரில் (60) கடந்த 4 மற்றும் 8-ஆம் தேதியன்றும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, பஞ்சாபில் 54 மையங்களிலும், மணிப்பூரில் 12 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பஞ்சாப் மற்றும் மணிப்பூரில் முதலில் தபாலில் பதிவாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 2 மாநில தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai