சுடச்சுட

    

    பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கக் கோரும் மசோதா வாபஸ்

    By DIN  |   Published on : 11th March 2017 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கக் கோரும் எண்ணத்துடன் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மசோதா, நீண்ட விவாதத்துக்குப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
    பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடுகளை பயங்கரவாத ஆதரவு நாடுகளாக அறிவிக்கக் கோரும் தனிநபர் மசோதாவை சுயேச்சை எம்.பி. ரஞ்சீவ் சந்திரசேகர் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
    உலகில் உள்ள எந்த நாட்டையும் பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கவும், அந்த நாடுகளுடனான பொருளாதார, வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவும் வழிவகுக்கும் அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றிருந்தன. மேலும், அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியா வருவதற்கு அனுமதி மறுக்கும் அம்சமும் இந்த மசோதாவில் இருந்தது.
    இந்நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். எனினும், சில உறுப்பினர்கள் இந்த மசோதா தொடர்பான சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பினர். குறிப்பாக, சமாஜவாதி கட்சி எம்.பி. ஜாவீத் அலி கான் பேசுகையில், "நான் இந்த மசோதாவை ஆதரிக்கிறேன். அதேசமயத்தில், மத்திய ஆசியாவில் பயங்கரவாதத்தை தூண்டிவரும் இஸ்ரேலும் பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதற்கு அரசு தயாரா? எனக் கேள்வியெழுப்பினார்.
    நியமன எம்.பி. கேடிஎஸ் துளசி பேசுகையில், "இந்த மசோதாவை நான் எதிர்க்கவில்லை. எனினும், இந்த மசோதாவில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. குறிப்பாக, பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிப்பதால் ஏற்படும் விளைவுகளையும், பயன்களையும் நாம் ஆராய வேண்டும்' என்றார்.
    அமைச்சர் கேட்டுக்கொண்டதால் வாபஸ்: இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை இணையமைச்சர் கங்காராம் அஹிர் கூறியதாவது:
    பயங்கரவாதத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மேலும், பயங்கரவாத நாடுகளைச் சேர்ந்த மக்களைக் கையாள்வது தொடர்பான ஏராளமான சட்டங்களும் தற்போது இருக்கின்றன. எனவே, இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தனது மசோதாவை சுயேச்சை எம்.பி. ரஞ்சீவ் சந்திரசேகர் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai