சுடச்சுட

    

    பிரதமரின் படத்தை விளம்பரத்தில் பயன்படுத்திய விவகாரம்: மன்னிப்புக் கோரின ஜியோ, பே-டிஎம் நிறுவனங்கள்

    By DIN  |   Published on : 11th March 2017 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jio

    பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை உரிய அனுமதியின்றி தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸ் ஜியோ, பே-டிஎம் ஆகிய இரு நிறுவனங்கள் மத்திய அரசிடம் மன்னிப்புக் கோரியுள்ளன.
    கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கப்பட்டபோது, அந்த நிறுவனத்தின் சார்பில் நாளிதழ்களில் வெளியான முழுப்பக்க விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
    இதேபோல், உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு பேடி-எம் நிறுவனம் சார்பில் நாளிதழ்களில் வெளியான விளம்பரத்தில் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
    இதுதொடர்பாக, அப்போது கடும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் சில உறுப்பினர்கள் கேள்வியெழுப்பி இருந்தனர்.
    இதற்கு, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் சி.ஆர். சௌத்ரி வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
    சின்னங்கள், பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டுத் தடுப்பு) சட்டம் 1950-ஐ மீறும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ, பே-டிஎம் ஆகிய இரு நிறுவனங்களும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியிருந்தன.
    இதுதொடர்பாக, இரு நிறுவனங்களிடமும் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை சார்பில் விளக்கம் கோரப்பட்டது.
    இந்நிலையில், கவனக்குறைவு காரணமாக தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
    இந்நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடும் முன்பு சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறுவது தொடர்பாக, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் அச்சு ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai