சுடச்சுட

    

    பிரிவினைவாதிகள் கடையடைப்பு போராட்டம்: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    By DIN  |   Published on : 11th March 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kashmir

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் பிரிவினைவாதிகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது வெறிச்சோடி காணப்படும் வீதியில் பறக்கும் புறாக்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீரில் பிரிவினைவாதிகள் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி மக்கள் 2 பேர் பலியானதாக பிரிவினைவாதிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதை கண்டித்து, காஷ்மீரில் ஹூரியத் மாநாடு பிரிவினைவாத அமைப்பு, ஜேகேஎல்எஃப் சார்பில் கடையடைப்பு போராட்டத்துக்கு வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    இதனால் காஷ்மீரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் பெரும்பாலான இடங்களில் ஓடவில்லை. சில இடங்களில் மட்டும் வாகனங்கள் இயக்கப்படுவதை காண முடிந்தது.
    பிரிவினைவாத தலைவர்கள் கைது: இதனிடையே, காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முக்கிய பிரிவினைவாத தலைவர்கள் பாதுகாப்புப் படையினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஹுரியத் தலைவர்கள் சையது அலி ஷா கிலானி, மிர்வாய்ஸ் உமர் ஃபரூக் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். புல்வாமா சண்டையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தும்படியும் பொது மக்களுக்கு பிரிவினைவாத தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனால் காஷ்மீரில் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. மாநில போலீஸாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai