சுடச்சுட

    

    இம்பால்: உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று சனிக்கிழமை (மார்ச் 11) எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருப்பதால் இன்று சனிக்கிழமை பிற்பகலுக்குள் 5 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போகும் கட்சிகள் எவை என்பது தெரிந்துவிடும்.

    மணிப்பூரில் (60) தொகுதிகளுக்கு கடந்த மற்றும் 8 ஆம் தேதியன்று தேர்தல்கள் நடத்தப்பட்டன. பதிவான வாக்குகள் அனைத்தும் மணிப்பூரில் 12 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

    இதுவரை கிடைத்த தகவல்களின் படி காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும் பாஜக 1 தொகுதியிலும் மற்றவர்கள் 3 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையங்களைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai