Enable Javscript for better performance
மணிப்பூரில் பாஜக - காங்கிரஸ் இடையே தொடரும் இழுபறி; முதல்வர் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மணிப்பூரில் பாஜக - காங்கிரஸ் இடையே தொடரும் இழுபறி; முதல்வர் வெற்றி

    By DIN  |   Published on : 11th March 2017 10:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manipur

    இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    மணிப்பூர் தொகுதியில்  பாஜக 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், இடது சாரிகள் 1 தொகுதியிலும், இதர வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

    மணிப்பூர் மாநில முதல்வர் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார். தவ்பால் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரோம் ஷர்மிளாவை தோற்கடித்து வெற்றியை பதிவு செய்துள்ளார்.

    மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்யிது. காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டது. 11 பெண்கள் உட்பட 266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் 87.51 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின. இன்று காலை முதல் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai