சுடச்சுட

  
  es

  தவுபால்: மணிப்பூரில் (60) தொகுதிகளுக்கு கடந்த 4 மற்றும் 8 ஆம் தேதியன்று தேர்தல்கள் நடத்தப்பட்டன. பதிவான வாக்குகள் அனைத்தும் மணிப்பூரில் 12 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
  இதுவரை கிடைத்த தகவல்களின் படி,
  பாஜக - 15
  காங்கிரஸ் - 23
  மற்றவை - 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

  மணிப்பூரின் இரும்பு பெண்மணி என அழைக்கப்படுபவர் இரோம் ஷர்மிளா. இவர், மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று 16 ஆண்டுகளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்.

  தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு சில மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சியைத் துவக்கினார். அவரது மக்கள் எழுச்சி நீதி கூட்டணி என்ற கட்சி மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டது. மணிப்பூர் முதல்வர் இபிபோ சிங்கை எதிர்த்து தவுபால் தொகுதியில் ஐரோம் ஷர்மிளா போட்டியிட்டார்.

  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவில் இருந்து வந்த ஐரோம் ஷர்மிளாவுக்கு நோட்டாவிற்கு கிடைத்த 143 வாக்குகளை விட 53 வாக்குகள் குறைவாகவே அதவாது, வெறும் 90 வாக்குளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

  முதல்வர் இபிபோ சிங் தனது தொகுதியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டார்.

  மக்களுக்காக 16 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த ஒரு போராளியை அம்மாநில மக்கள் ஓரம் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர், ‘தேர்தல் தோல்வி என்னைப் பாதிக்கவில்லை. அது மக்களின் மனநிலையை பொறுத்தது. அடுத்த தேர்தலிலும் முயற்சிப்பேன்’ என கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai