சுடச்சுட

    

    மத்திய அமைச்சருக்கு எதிராக கைது ஆணை: நீதிமன்றம் அதிரடி

    By DIN  |   Published on : 11th March 2017 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏவை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான பாபுல் சுப்ரியோவுக்கு பிணையில் வெளிவரக்கூடிய கைது ஆணையை கொல்கத்தா நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
    முன்னதாக, தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் தன்னை அவதூறாக பேசியதாக பாபுல் மீது திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மொஹுவா மொய்த்ரா காவல் துறையில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தார். இதையடுத்து, பாபுல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    இந்த வழக்கில் 3 முறை அழைப்பாணை அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவருக்கு பிணையில் வெளிவரக் கூடிய கைது ஆணையை, நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai