சுடச்சுட

  
  utharakahnat_BJP

   

  டேராடூன்: மலைவாசஸ்தலங்கள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்ட்டில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.  

  நாட்டின் வடமேற்கு மாநிலமான உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் தலைமயிலான ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக ஹரீஷ் ராவத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு இறுதியில் அங்கு எம்.எல்.ஏக்கள் சிலர் ஆட்சிக்கு எதிர்க்குரல் எழுப்பியதால் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது.

  இந்நிலையில் அங்கே சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா இடையே கடும் போட்டி நிலவியது.தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்புகளும் பாஜக வெல்லும் என்று தெரிவித்தன.  

  அதன்படியே இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்து மொத்தமுள்ள 64 இடங்களில் 51 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

  முதல்வரான ஹரீஷ் ராவத் தான் போட்டியிட்ட தொகுதியில் பின் தங்கியுள்ளார்.

  இதன் காரணமாக உத்தரகாண்ட்டில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.    

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai